அயர்லாந்தில் ஆடைகளை களைந்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல்

தாக்கப்பட்ட இந்தியர் 3 வாரங்களுக்கு முன்பு அயர்லாந்து சென்றுள்ளார்.;

Update:2025-07-23 14:59 IST

டப்ளின்,

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள டல்லாட் பகுதியில், கடந்த 19-ந்தேதி 40 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நபர் குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து அந்த நபரை அவர்கள் தாக்க தொடங்கினர். அவரது ஆடைகளை களைந்து கொடூரமாக தாக்கினர். இதனைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் சிலர் ஓடிச் சென்று தாக்குதலை தடுத்து நிறுத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், காயமடைந்த இந்தியரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அயர்லாந்து போலீசார், இனவெறி காரணமாக இந்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்கப்பட்ட இந்தியர் 3 வாரங்களுக்கு முன்பு அயர்லாந்து சென்றுள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்திய கும்பல் ஏற்கனவே டல்லாட் பகுதியில் இதே போல் வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று அங்குள்ள உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்