அயர்லாந்தில் கடும் பனிப்பொழிவால் 150 பள்ளிகள் மூடல்

அயர்லாந்தில் அதிக பனிப்பொழிவுக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.;

Update:2026-01-28 06:11 IST

டப்ளின்,

அயர்லாந்தில் சமீப காலமாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்குள்ள சாலைகள், வீதிகளில் பனிக்கட்டிகள் படர்ந்துள்ளன. மோசமான வானிலை காரணமாக முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

எனவே சாலைகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அங்கு மேலும் அதிக பனிப்பொழிவுக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி வடக்கு அயர்லாந்தில் 150-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்