பாகிஸ்தானில் வக்கீல் தம்பதிக்கு 17 ஆண்டு சிறை தண்டனை

வக்கீலான ஜைனாப் மசாரி மனித உரிமைகள் நலனிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.;

Update:2026-01-26 22:26 IST

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானை சேர்ந்தவர் ஜைனாப் மசாரி. இவருடைய தாய் ஷீரன் மசாரி. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெரிக்-இ-பாகிஸ்தான் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார். அவருடைய ஆட்சியின்போது மனித உரிமைகள் நலத்துறை மந்திரியாக பதவி வகித்தார். வக்கீலான ஜைனாப் மசாரி மனித உரிமைகள் நலனிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இவருடைய கணவர் ஹாதி அலியும் வக்கீலாவார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்னர் இவர் அந்த நாட்டின் ராணுவத்தை விமர்சித்தும், ராணுவத்தின் தலைமை தளபதி அசிம் முனீரை விமர்சித்தும் பதிவிட்டார். இதுதொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டு தேசவிரோத வழக்கு பதியப்பட்டது. இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டநிலையில் ஜைனாப் மசாரி மற்றும் அவருடைய கணவர் இருவருக்கும் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்