இம்மானுவேல் மேக்ரானின் மனைவியை விமர்சித்தவர் மீது வழக்குப்பதிவு
பிரிகெட்டே ஆணாகப்பிறந்து பெண்ணாக மாறியவர் என அமெரிக்க பிரபலம் கேண்டஸ் ஓவன்ஸ் விமர்சித்து இருந்தார்.;
பாரிஸ்,
அமெரிக்காவைச் சேர்ந்தவர், சமூக வலைதளத்தில் பிரபலமானவரான பெண் அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ். இவர், ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் மனைவி பிரிகெட்டே மேக்ரான், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர் என்று கூறியிருந்தார்.
இது அந்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் சார்பில், அமெரிக்காவின் டெலாவேர் ஐகோர்ட்டில் அவதுாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், மேக்ரான் தம்பதிக்கு எதிராக, கேண்டஸ் ஓவன்ஸ் தொடர்ந்து அவதுாறு பிரசாரம் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற அவதுாறு ஏற்படுத்தும் விமர்சனங்களைத் தொடர்ந்தால், பெரிய தொகையை இழப்பீடாக கோரப்படும் என, மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.