ஆபரேஷன் சிந்தூர்: துண்டாடப்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம்

மசூத் அசாரின் குடும்பத்தை பஹவல்பூரில் இந்திய படைகள் துண்டாடிவிட்டன என்று ஜெய்ஷ் இ அமைப்பின் பயங்கரவாதி கூறியுள்ளான்.;

Update:2025-09-16 18:08 IST

இஸ்லமாபாத்,

 ஜம்மு காஷ்மீரின் பகல்காமில், சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர். இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது.ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்தது. இந்தியா நடத்திய தாக்குதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலின் போது ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் குடும்பத்தினரும் உயிரிழந்தனர். ஆனால் மசூத் அசார் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த சூழ்நிலையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தளபதியாக செயல்படும் மசூத் இலியாஸ் காஷ்மீரி என்ற பயங்கரவாதி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவன் கூறியுள்ளதாவது: டெல்லி, காபூல் மற்றும் காந்தகாரில் பாகிஸ்தானை பாதுகாக்க சண்டையிட்டுள்ளோம். அனைத்தையும் இழந்த பிறகு, மே 7 ம் தேதி மவுலானா மசூத் அசாரின் குடும்பத்தை பஹவல்பூரில் இந்திய படைகள் துண்டாடிவிட்டன ” என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்