மசோதா மீதான விவாதத்தின்போது எம்.பி.க்கள் மோதல் - ஸ்லோவேகியா நாடாளுமன்றத்தில் பரபரப்பு

நாடாளுமன்றத்தில் குற்றவியல் சட்ட சீர்திருத்த மசோதாவை ஸ்லோவேகியா பிரதமர் கொண்டு வந்தார்.;

Update:2025-12-14 17:35 IST

பிராட்டிஸ்லாவா,

ஐரோப்பிய நாடான ஸ்லோவேகியாவில் பிரதமர் ராபர்ட் பிகோ தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ரகசிய தகவல்களை வெளியிடுபவர்கள் மற்றும் அரசு தரப்பு சாட்சி தொடர்பான குற்றவியல் சட்டத்தில் சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதா தொடர்பாக ஸ்லோவேகியா நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சிக்கே அச்சுறுத்தலாக அமையும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது வாக்குவாதம் முற்றியதில் நாடாளுமன்றத்திலேயே எம்.பி.க்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்