பிரேசில்: புயல் காரணமாக 400 விமானங்கள் ரத்து
பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.;
பிரேசிலியா,
பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் வெப்ப மண்டல புயல் உருவானது. அப்போது பலத்த காற்று வீசியதால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமர் 13 லட்சம் குடும்பங்கள் இருளில் சிக்கி தவித்தன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியது.
அதேபோல் புயல் காரணமாக விமானங்கள் பறப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனவே 400 விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டன. இதனால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைந்தனர்.