தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விபத்து; இந்தியர் உள்பட 4 பேர் பலி
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.;
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்காவின் வாசுலு நட்டல் மாகாணம் டர்பன் நகரில் உள்ள மலைப்பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான நரசிம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கட்டுமான பணியின்போது திடீரென கோவில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், பக்தர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதில் விக்கி ஜெய்ராஜ் என்ற இந்தியரும் அடக்கம். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் ஒரு நபர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.