பஹல்காம் தாக்குதல்: நீங்கள் ஏன் அதை கண்டிக்கவில்லை..? பாக்.பிரதமருக்கு கனேரியா கேள்வி

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.;

Update:2025-04-24 16:16 IST

கராச்சி,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு விளையாட்டு பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றால் பிரதமர் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? என்று அந்தாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து டேனிஷ் கனேரியா தனது எக்ஸ் பக்கத்தில், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? உங்கள் படைகள் ஏன் திடீரென்று அதிக எச்சரிக்கையுடன் உள்ளன? ஆழமாகப் பார்த்தால், உங்களுக்கு உண்மை தெரியும். நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. இது அவமானம்! என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்