பிலிப்பைன்ஸ்: அடுத்தடுத்த வாகனங்களில் மோதிய பஸ் - 10 பேர் பலி

டிரைவர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2025-05-02 17:42 IST

கோப்புப்படம்

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் சுபிக்-கிளார்க்-டார்லாக் நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று நேற்று சென்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ்சானது சாலைகளில் உள்ள அடுத்தடுத்த வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் எதிர்பாராதவிதமாக 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ் டிரைவர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தூங்கியதாக கூறப்படுகிறது. மேலும் விபத்து தொடர்பாக பிலிப்பைன்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்