சிலி நாட்டின் வடக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.;
சான்டியாகோ,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் வடக்கே அடகாம பாலைவன பகுதியருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், சிறிய அளவில் கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
எனினும், இதனால் உடனடியாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை சிலி நாட்டின் ஜனாதிபதி கேப்ரியேல் போரிக் உறுதி செய்துள்ளார். இந்த நிலநடுக்கம் தொடர்ச்சியாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் விட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது.