பிரபல குச்சிப்புடி கலைஞர் அருணிமா குமாருக்கு இங்கிலாந்தின் உயரிய பதக்கம்

இந்திய கலாசாரத்தை மேம்படுத்தும் பணிக்காக அருணிமா குமாருக்கு இந்த விருதை மன்னர் சார்லஸ் அறிவித்தார்.;

Update:2025-10-18 02:30 IST

லண்டன்,

டெல்லியை சேர்ந்தவர் அருணிமா குமார் (வயது 47). இந்திய கலாசார நடனங்களில் ஒன்றாக குச்சிப்புடி கலைஞராக உள்ளார். 2008-ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமியின் யுவ புராஸ்கர் விருதை பெற்றார். தற்போது இங்கிலாந்தில் அருணிமா குமார் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் அந்த நாட்டில் உள்ள கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பிரிட்டிஷ் எம்பயர் பதக்கத்திற்கு அவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்திய கலாசாரத்தை மேம்படுத்தும் பணிக்காக அருணிமா குமாருக்கு இந்த விருதை மன்னர் சார்லஸ் அறிவித்தார். அதன்படி அவருக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டது. இதன்மூலம் பிரிட்டிஷ் எம்பயர் பதக்கம் பெறும் முதல் குச்சிப்புடி நடன கலைஞர் என்ற பெருமையை அருணிமா குமார் பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்