அமெரிக்க எல்லை அருகே பறந்த ரஷிய உளவு விமானம்; பரபரப்பு சம்பவம்

அமெரிக்காவின் எல்லையோர மாகாணமாக அலாஸ்கா திகழ்கிறது.;

Update:2025-08-26 02:28 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் எல்லையோர மாகாணமாக அலாஸ்கா திகழ்கிறது. அலாஸ்கா மாகாணம் கனடா அருகே அமைந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா வான் எல்லை அருகே நேற்று ரஷிய உளவு விமானம் பறந்துள்ளது. ரஷியாவின் இலூசின் - 20 உளவு விமானம் அமெரிக்க எல்லை அருகே பறந்ததை அலாஸ்காவில் நிறுவப்பட்டுள்ள வான் பாதுகாப்பு ரேடார் கண்டறிந்தது.

இதையடுத்து உடனடியாக அமெரிக்காவின் எப்-16 போர் விமானங்கள் விரைந்து சென்று ரஷிய உளவு விமானத்தை இடைமறித்து தடுத்து நிறுத்தின. இதையடுத்து ரஷிய உளவு விமானம் சர்வதேச வான்பரப்பிற்குள் நுழைந்தது.

கடந்த ஒருவாரத்தில் அலாஸ்கா எல்லை அருகே 3 முறை ரஷிய உளவு விமானங்கள் பறந்துள்ளன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்குமுன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்