100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பாடல்

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2024-04-16 11:55 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக பொதுமக்களிடம் வாக்குப்பதிவு குறித்த பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவில் அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மாதவன், ரவீணா டான்டன் உள்ளிட்டோர் தோன்றி வாக்குப்பதிவின் அவசியம் குறித்து பேசியுள்ளனர். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள பாடல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்