நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-05 10:18 GMT

நெல்லை,

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்கிறார்கள்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் என்.ஜி.ஓ காலனியில் வசித்து வரும் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.முருகனின் அலுவலகம், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, பண உதவி எதுவும் செய்யப்படுகிறதா என்ற அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்