புற்றுநோயை விட மோசமான நோய்கள் 'இந்தியா' கூட்டணியிடம் உள்ளன - பிரதமர் மோடி

புற்றுநோயை விட மோசமான நோய்கள் ‘இந்தியா’ கூட்டணியிடம் உள்ளன என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

Update: 2024-05-22 16:01 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஸ்ரவஸ்தி பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"புற்றுநோயை விட மோசமான நோய்கள் 'இந்தியா' கூட்டணியிடம் உள்ளன. அந்த நோய்கள் பரவினால் இந்த நாட்டையே அழித்துவிடும். அந்த நோய்கள் என்னவென்றால், அவர்களிடம் இருக்கும் வகுப்புவாதம், இனவாதம் மற்றும் வாரிசு அரசியல்.

60 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் இருந்தவர்கள், இப்போது என்னை தடுத்து நிறுத்துவதற்காக வந்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் வளர்ச்சியை குறித்து எதுவும் பேசுவதில்லை. எதற்காக அவர்கள் வாக்கு கேட்டு வருகிறார்கள்?"

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்