6ம் கட்ட தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

6ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

Update: 2024-04-29 07:34 GMT

டெல்லி,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, வரும் 25ம் தேதி 6ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகள், அரியானா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார், மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், 6ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய 6ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனு சரிபார்ப்பு 7ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெற 9ம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்