'இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டியது அவசியம்' - ராகுல் காந்தி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டியது அவசியம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.;

Update:2024-05-19 21:57 IST

Image Courtesy : ANI

புதுடெல்லி,

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதற்கு பிரதமர் மோடியின் மோசமான பொருளாதார கொள்கைகளே காரணம் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்நிலையில் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் ராகுல் காந்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"நரேந்திர மோடி எதைப்பற்றி பேச வேண்டுமோ, அதை என்னால் பேச வைக்க முடியும். அவரது வாயில் இருந்து 'வேலையின்மை' என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் இதுவரை வரவேயில்லை. இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க பிரதமர் மோடி ஓய்வு பெற வேண்டியது அவசியம்."

இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்