உத்தர பிரதேசம்: முதற்கட்ட தேர்தலில் 60.25 சதவிகித வாக்குகள் பதிவு

மேற்கு உத்தர பிரதேசத்தின் 8 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 60.25 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

Update: 2024-04-20 03:23 GMT

Image Courtesy : PTI

லக்னோ,

நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நேற்று முதற்கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள 8 மக்களவை தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

இதன்படி முசாபர்நகர், நகினா, சகாரன்பூர், கைரானா, மொரதாபாத், பிலிபிட், பிஜ்னோர் மற்றும் ராம்பூர் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் மொத்தம் 80 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 60.25 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்