யோகாவில் பின்பற்றவும், தவிர்க்கவும் வேண்டியது எது?

யோகா என்பது ஒரு ஆரோக்கியமான உடற்பயிற்சியாகும். நமது உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும் ஒரு பயிற்சியாக இது உள்ளது. ஆனால் யோகாவை தவறாக செய்யும்போது அதனால் சில எதிர்மறையான பாதிப்புகளை நாம் சந்திப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே யோகா செய்வதற்கு முன்பு சில விஷயங்களை தெரிந்துகொள்வது நல்லது. யோகா என்பது ஒரு ஆரோக்கியமான விஷயமாகும். தினசரி யோகா செய்பவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.

Update: 2023-10-24 06:09 GMT

 மன அமைதி மற்றும் புத்துணர்ச்சியை பெறுவதற்கு யோகா உதவுகிறது. சில சமயங்களில் நாம் அதிகமாக யோகா பயிற்சிகளை மேற்கொள்கிறோம். இதனால் நீங்கள் அதிகமாக சோர்வடைய வாய்ப்புள்ளது. யோகாவைக் கவனமுடன் வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டியது முக்கியமாகும்.

எதாவது ஒரு யோகா முறையை தவறாக செய்யும்போது அதனால் உங்கள் உடலில் பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு யோகா செய்யும்போது அதிக வலி ஏற்படலாம். இப்படி யோகா செய்யும்போது நாம் கவனிக்கவேண்டிய விஷயங்களை இப்போது பார்க்கலாம். யோகாவை பொறுத்தவரை ஒவ்வொரு யோகா ஆசனத்திற்கும் ஒரு உடல் வடிவம் உண்டு. அதை சரியாக செய்யும்போது நமது உடல் ஆரோக்கியத்தில் அவை பல நன்மைகளை செய்யும். ஆனால் அவற்றை சரியான ஆசிரியர் இல்லாமலோ அல்லது அனுபவம் இல்லாமலோ தவறாக செய்யும்போது அதனால் உடலில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது, இதனால் நீங்கள் சோர்வாக உணரலாம். ஒரு பயிற்சியை தவறாக செய்யும்போது அது செய்வதற்கு மிக கடினமாக இருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில் அந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உடலின் சுவாசம் மற்றும் இயக்கத்தை பாதிக்கும் எந்த பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டாம். முடிந்த வரை யோகா ஆசிரியரை கொண்டு பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

யோகா பயிற்சி செய்யும்போது சில விஷயங்கள் மீது நாம் கவனமாக இருப்பது முக்கியமாகும். சாதாரணமாக யோகா செய்யும்போது உடல் சோர்வடைவது என்பது சகஜமான விஷயம்தான். ஆனால் உடல் சோர்வடைந்த பின்னரும் கூட சிலர் விடாமல் யோகா முறைகளை செய்வதுண்டு. இப்படி செய்யும்போது நமது உடலானது யோகா செய்வதற்கு ஒத்துழைக்காது. ஆனால் கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்வோம். இந்த அளவிற்கு சிரமப்பட்டு யோகாவை செய்ய தேவையில்லை. உடல் ஒத்துழைக்காத பட்சத்தில் யோகா செய்வதை நிறுத்தலாம். உண்மையில் மற்ற பயிற்சிகளை போல யோகா உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய பயிற்சி அல்ல. அது உடலுக்கும் மனதிற்கும் அமைதியை அளிக்கக்கூடியது.

சரியான வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் யோகா முறைகளை செய்கிறீர்கள் எனில் அது உங்கள் உடலில் வலி இல்லாமலே பயிற்சி செய்வதற்கு அது உதவும். ஒருவேளை நீங்கள் யோகா செய்யும்போது உங்களது உடலில் வலியை உணர்கிறீர்கள் எனில் அதை கண்காணித்து, உங்கள் உடல் மற்றும் திறனுக்கு ஏற்றவாறு எளிய ஆசனங்களைச் செய்வது நல்லது. யோகா பயிற்சியை உங்கள் சுவாசத்துடன் இணைப்பது என்பது முக்கியமான விஷயமாகும். சாதாரணமாக யோகா பயிற்சிகளை செய்யும்போது அது உங்களுக்கு எந்த வித மூச்சு பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது. ஆனால் சில கடுமையான யோகா முறைகளை நீங்கள் செய்யும்போது அதனால் சில நேரங்களில் உங்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த சமயங்களில் யோகா செய்வதை நிறுத்துவது நல்லது. மேலும் மூச்சு திணறல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் கடுமையான யோகா முறைகளை தவிர்ப்பது நல்லது.

காலையில் எழுந்ததும் நீங்கள் யோகா பயிற்சி செய்யும் நபரா? அப்போ உங்க யோகாசனங்களை திறம்பட செய்ய இந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். இந்த உணவுகள் உங்க உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. உங்க உடலுக்கு தேவையான தெம்பை அளித்து உங்களுக்கு தேவையான யோகாசனங்களை செய்ய முடியும். அதற்கு நீங்கள் ஒரு சீரான ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது அவசியம். ஏனெனில் உணவில் இருந்து தான் நம் உடலுக்கு தேவையான ஆற்றலானது பெறப்படுகிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி அதை கலோரியாக மாற்றி ஆற்றலாக சேகரிக்கப்படுகிறது. சில வகை உணவுகள் உங்களுக்கு காலையிலேயே சோம்பலை ஏற்படுத்தலாம். அப்படி சோம்பலை ஏற்படுத்தும் உணவுகள் உங்க யோகாசனத்திற்கு எந்த வகையிலும் பலன் அளிக்காது. புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது முக்கியம். எனவே யோகாசனங்களை செய்ய அதற்கு முன்னும் பின்னும் இந்த உணவுகளில் கவனம் செலுத்துங்கள்.

அவகடோ பழம் மிகவும் சத்தானவை. அவற்றில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளன, அவை யோகாவுக்கு முன் அதிகாலையில் உட்கொள்வது சரியான தேர்வாக அமைகிறது. காலையில் வெண்ணெய் பழங்கள் சீரணிக்க எளிதானது. கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்கள் போன்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. இது உங்களுக்கு விரைவான ஆற்றலை தரும். இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக அமையும். காலையில் ஸ்மூத்திகளை எடுத்துக் கொள்ளலாம். இது உடலை நிரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மற்றும் காலே போன்ற பச்சை காய்கறிகளைப் பயன்படுத்தலாம். மேலும் புதினாவையும் பயன்படுத்துவது உங்களை புத்துணர்ச்சியடையச் செய்யும். தயிர், ஓட்மீல் மற்றும் புரோட்டீன் ஷேக்ஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளுடன் உங்கள் நாளை தொடங்குவது மிகவும் சிறந்தது. இது உங்க தசை செயல்பாடு மற்றும் செல்களை மேம்படுத்த உதவுகிறது. பாதாம் மற்றும் உலர்ந்த பழங்களில் ஊட்டச்சத்துக்கள் செறிவு அதிகளவு உள்ளது. மேலும் இதில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் உள்ளன. இது உங்களுக்கு நிறைய சக்தியை வழங்குகிறது. வொர்க்அவுட்டின் போது, உங்கள் உடல் வியர்த்தல் மூலம் திரவங்களை இழக்கிறது, இது நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே, ஒரு யோகா அமர்வுக்குப் பிறகு எதையும் சாப்பிடுவதற்கு முன்பு, முதலில் உங்களை நீரேற்றம் செய்வது முக்கியம். உங்கள் ஆற்றல் மட்டத்தை மேம்படுத்த, வைட்டமின் சி பெற தண்ணீரில் எலுமிச்சை சாறுகளை சேர்த்து அருந்தலாம்.

க்ரீன் டீயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் காலையில் இதை குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இது எல்-தியானைன் மற்றும் காஃபின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இவை இரண்டும் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகின்றன.ஒரு கப் கிரீன் டீ உங்கள் இதயத் துடிப்பைக் குறைக்க உதவுகிறது. வாழைப்பழங்கள், பெர்ரி, திராட்சை, ஆப்பிள் மற்றும் பேரீச்சம் பழம் போன்ற பழ சாலட்டை சாப்பிடுவது உடற்பயிற்சிக்கு பிறகு ஊட்டச்சத்துக்களை அளிக்க உதவுகிறது. இது புரதம், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்க உதவும். உயர்தர புரதம் மற்றும் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களை உட்கொள்வதற்கு நீங்கள் வேக வைத்த முட்டைகளை எடுத்துக் கொள்ளலாம். இது தசைகளை பராமரிக்கவும், சரிசெய்யவும் உதவுகிறது. யோகா அமர்வுக்குப் பிறகு கேரட், கீரை அல்லது முட்டைக்கோசு ஆகியவற்றைக் கொண்ட காய்கறி சூப்பை பயன்படுத்தலாம். இந்த சூப்கள் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்த மிகச் சிறந்தவை.

பாடல் அல்லது இசையைக் கேட்டுக்கொண்டு யோகா பயிற்சி மேற்கொள்ளவதால் மனம் அமைதி அடையும் என பலர் கருதுகிறார்கள். ஆனால் அவ்வாறு யோகாசனம் மேற்கொள்ளும்போது நம் கவனம் இசையில் மூழ்கிவிடலாம். அப்போது உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து செயல்பட முடியாது. உடலும் மனமும் ஒன்றிணைந்து செயல்படுவதே யோகா. அதனால் சற்று அமைதியான சூழலில் யோகா மேற்கொள்ள வேண்டும். அனைவரும் அதிகாலை எழுந்து யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்த முடியாது. ஆனால் உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் யோகா பயிற்சி மேற்கொள்ள கூடாது. உணவு உட்கொண்டு இரண்டு மணி்நேரத்திற்கு பிறகு தான் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 8 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆசனங்கள் மேற்கொள்ள கூடாது. குழந்தைகள் தானாக முன்வந்து ஆர்வம் காட்டினால் பெற்றோரின் கண்காணிப்பில் எளிமையான யோகாசனங்கள் மேற்கொள்ளலாம்.

பொதுவாக மாதவிடாய் காலத்தில் 3 நாட்களுக்கு யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டாம். குறிப்பாக உடல் தலைகீழாக இருக்கும் நிலையில் உள்ள எந்த ஆசனமும் மேற்கொள்ள கூடாது. தலைகீழாக இருக்கும் அத்தனை ஆசனங்களாலும் உடலில் அதிக வெப்பம் உண்டாகும். இது மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தும். ஆனால் மாதவிடாய் காலத்தில் கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறவர்கள், வஜ்ராசனம், பத்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களை மேற்கொள்ளலாம். மேலும் பத்ராசனா என்று கூறப்படும் பட்டர்ஃபிலை ஆசனம் மேற்கொள்ளும்போது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியில் இருந்து விடுபடலாம். இருதய பிரச்சனைகள் உள்ளவர்கள் உடலை பின்பக்கம் வளைக்கும் ஆசனங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதே போல முதுகு வலி பிரச்சனைகளுடன் இருப்பவர்கள் இந்த ஆசனங்கள் மேற்கொள்ளும்போது, பயிற்சியாளர்கள் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

முதுகு வலி மற்றும் பிற உடல் வலிகள் உள்ளவர்கள் முதல் கட்டமாக பிராணயாமம் போன்ற முச்சு பயிற்சிகளை மேற்கொண்டு தங்களை ஆசுவாசப்படுத்தி கொள்வதில் கவனம் செலுத்தலாம். இணையம் மூலம் பலர் தற்போது யோகா கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. பயிற்றுனர் இன்றி ஒருவர் தானாக யோகா கற்றுக்கொள்ளும்போது அது பல உடல் நல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். முதலில் டிவி பார்த்து யோகா செய்வதை மக்கள் நிறுத்த வேண்டும். யோகா நிபுணர்களின் கண்காணிப்பில் மட்டுமே யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சிலர் உடல் வலியில் இருந்து வெளிவர யோகா கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அந்த வலி ஏற்பட்டதன் காரணத்தை கண்டறிந்து பிறகு யோகா கற்றுக்கொண்டு, அதன் மூலம் தீர்வு காண்பதே நன்மை அளிக்கும்.

தவறாக யோகா பயிற்சி மேற்கொண்டு வலியில் வருபவர்களுக்கு முதலில் வலியில் இருந்து விடுபட தேவையான மருத்துவ உதவியை வழங்குவோம். ஆனால் ஒரு நோய் பாதிப்பு ஏற்பட்டவுடன் முழுமையாக அதை குணப்படுத்த யோகா பயிற்சி மேற்கொள்வதற்கு பதிலாக, எந்த உடல் நல பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க எளிய முறையில் நோய் தடுப்பு பயிற்சியாக யோகா மேற்கொள்வது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்