3-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பைசலாபாத்தில் இன்று நடக்கிறது.;

Update:2025-11-08 04:30 IST

பைசலாபாத்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது .இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முந்தைய தோல்விக்கு தென் ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பைசலாபாத்தில் இன்று (மாலை 3.30 மணி) நடக்கிறது. இந்த போட்டியில் வெற்ற பெற்று தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும். 

Tags:    

மேலும் செய்திகள்