அபுதாபி டி10 லீக்: அதிரடியில் மிரட்டிய டிம் டேவிட்.. யுஏஇ புல்ஸ் சாம்பியன்
இறுதிப்போட்டியில் யுஏஇ புல்ஸ் - ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணிகள் மோதின.;
image courtesy:twitter/@T10League
அபுதாபி,
8 அணிகள் இடையிலான 9-வது அபுதாபி டி10 லீக் தொடர் அபுதாபியில் நடைபெற்றது. 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படுவதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்ததது.
இதன் இறுதிப்போட்டியில் பொல்லார்டு தலைமையிலான யுஏஇ புல்ஸ் அணி, குர்பாஸ் தலைமையிலான ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணியுடன் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணியின் கேப்டன் குர்பாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த யுஏஇ புல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பில் சால்ட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜேம்ஸ் வின்ஸ் ரன் எதுவுமின்றி ரிட்டயர்டு ஹர்ட் ஆகியும் வெளியேறினர். ஆகியும் ஏமாற்றினர். அடுத்து ரோவ்மன் பவல் - டிம் டேவிட் ஜோடி கை கோர்த்தது.
இவர்களில் பவல் நிதானமாக ஆட டிம் டேவிட் அதிரடியில் பட்டையை கிளப்பினார். டிம் டேவிட்டின் அதிரடியால் யுஏஇ புல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 150 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய டிம் டேவிட் வெறும் 30 பந்துகளில் 12 சிக்சர்களுடன் 98 ரன்களுடனும், பவல் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணியால் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற யுஏஇ புல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 18 ரன்கள் அடிக்க, யுஏஇ புல்ஸ் தரப்பில் பரூக்கி, ஜுனைத் சித்திக், இப்திகார் அகமது மற்றும் கைஸ் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.