ஆஷஸ் டெஸ்ட்: ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்த இங்கிலாந்து...முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்;
பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் களமிறங்கினர். தொடக்கத்தில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஜாக் கிராலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் டக்கெட், ஆலி போப் இருவரும் நிலைத்து ஆடினர் . டக்கெட் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆலி போப் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . பின்னர் வந்த ஜோ ரூட் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து கேப்டன் ஸ்டோக்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம் ஹாரி புரூக் சிறப்பாக விளையாடினார் . ஹாரி புரூக் , ஜேமி ஸ்மித் இருவரும் பொறுப்புடன் ஆடினர் . சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த புரூக் அரைசதமடித்தது 52 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஜேமி ஸ்மித் 33 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 172ரன்களுக்கு ஆட்டமிழந்தது . ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிரெண்டன் டாக்ட் 2 விக்கெட் கிரீன் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.