ஆஷஸ் டெஸ்ட் : டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.;
பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இங்கிலாந்து:
பென் டக்கெட், ஜாக் கிராலி, ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட்.
ஆஸ்திரேலியா:
உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி , மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், பிரெண்டன் டாகெட், ஸ்காட் போலண்ட்.