ஆஷஸ் தொடரை வென்று வரலாறு படைப்போம்: இங்கிலாந்து கேப்டன் நம்பிக்கை

முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்குகிறது.;

Update:2025-11-21 06:45 IST

பெர்த்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் கேப்டன் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் ஆடவில்லை. ஸ்டீவன் சுமித் அணியை வழிநடத்துகிறார். வேகப்பந்து வீச்சாளர் பிரன்டன் டாக்கெட், தொடக்க ஆட்டக்காரர் ேஜக் வெதரால்டு ஆகியோர் இந்த டெஸ்டில் அறிமுகமாகிறார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஒரே டெஸ்டில் இரு புதுமுக வீரர்கள் அடியெடுத்து வைப்பது 2019-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் வெற்றியோடு தொடங்குவதற்கு ஆவலுடன் உள்ளனர்.இங்கிலாந்து அணி கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய 15 டெஸ்டுகளில் ஒன்றில் கூட ஜெயித்ததில்லை.

Advertising
Advertising

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆஷஸ் கிரிக்கெட் சரித்திரத்தை புரட்டிப்பார்த்தால், ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்தின் செயல்பாடு சிறப்பாக இல்லை என்பதை அணியில் உள்ள ஒவ்வொருவரும் அறிவோம். அடுத்த 2½ மாதங்களில் இங்கு வரலாறு படைப்பதற்கு எங்களுக்கு இது அருமையான வாய்ப்பாகும். ஜனவரி 2-வது வாரத்தில் தாயகம் கிளம்பும் போது ஆஷஸ் கோப்பையுடன் செல்ல வேண்டும் என்பதே எங்களது லட்சியம். இதற்காக கடினமாக உழைத்துள்ளோம். ஆனால் இது மிகவும் கடினம் என்பது தெரியும். ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த இடத்தில் வீழ்த்துவது எளிதான விஷயமல்ல.

ஸ்டீவன் சுமித் நீண்ட காலமாக எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறார். அவரை போன்ற வீரரை கட்டுப்படுத்துவது சுலபமல்ல. பேட்டிங்கில் அவரையும், மற்ற வீரர்களையும் குறைந்த ரன்னில் வீழ்த்தினால் எங்களது லட்சியத்தை அடைய வாய்ப்பு கிடைக்கும்.’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்