விராட் கோலியை முந்திய டேவிட் வார்னர்

சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் சதமடித்து அசத்தினார்.;

Update:2026-01-16 20:11 IST

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு எதிராக சிட்னி தண்டர் வீரர் டேவிட் வார்னர் சதமடித்து அசத்தினார்.

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார். விராட் கோலி 9 சதங்கள் அடித்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் 22 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். பாபர் அசாம் 11 சதங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்