யு19 உலகக் கோப்பை: அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

மழையால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.;

Update:2026-01-15 19:48 IST

ஜார்ஜியா,

16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது.இந்தப் போட்டி இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.தொடக்க நாளில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொண்டது. 

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் ஆயுஷ் மாத்ரே பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் அமெரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அமெரிக்கா அணியில் நிதிஸ் சுதிநி மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்கள் எடுத்தார்.இறுதியில் அமெரிக்கா அணி 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் ஹெனில் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.தொடர்ந்து 108 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. மழையால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது.

பின்னர் மழை நின்ற பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.   டிஎல்எஸ் விதிப்படி இந்திய அணிக்கு 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்