ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி சுற்று முழு விவரம்

இந்த தொடரின் அரையிறுதி சுற்று நாளை தொடங்க உள்ளது.;

Update:2025-11-20 15:45 IST

image courtesy:twitter/@ACCMedia1

தோஹா,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து வங்காளதேசம், இலங்கை அணிகளும், ‘பி’ பிரிவில் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த தொடரின் அரையிறுதி சுற்று நாளை தொடங்க உள்ளது. மாலை 3 மணிக்கு தொடங்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்காளதேசம் - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதனையடுத்து இரவு 8 மணிக்கு தொடங்கும் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன.

இறுதிப்போட்டி 23-ம் தேதி நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்