2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் வங்காளதேசம் அபார பந்துவீச்சு.. அயர்லாந்து திணறல்

வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 476 ரன்கள் குவித்தது.;

Update:2025-11-20 16:56 IST

image courtesy:ICC

டாக்கா,

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் மிர்புரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய வங்காளதேச அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 292 ரன்கள் அடித்திருந்தது. தனது 100-வது டெஸ்டில் ஆடும் முஷ்பிகுர் ரஹிம் 99 ரன்களுடனும், லிட்டான் தாஸ் 47 ரன்களுடனம் களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 476 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. லிட்டன் தாஸ் 128 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 106 ரன்களும் அடித்தனர். அயர்லாந்து தரப்பில் ஆண்டி மெக்பிரைன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி ஆரம்பம் முதலே வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் முன்னணி வீரர்களான பால்பிர்னி 21 ரன்களிலும், பால் ஸ்டிர்லிங் 27 ரன்களிலும், கேட் கார்மைக்கேல் 17 ரன்களிலும், ஹாரி டெக்டர் 14 ரன்களிலும், கர்டிஸ் காம்பர் டக் அவுட் ஆகியும் ஏமாற்றினார்.

2-வது நாள் முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களுடன் தடுமாறி வருகிறது. டக்கர் 11 ரன்களுடனும், ஸ்டீபன் டோஹனி 2 ரன்களுடனும் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் தரப்பில் ஹசன் முரத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்