கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இந்த போட்டி இந்தூரில் நடைபெறுகிறது.;

Update:2026-01-18 13:09 IST

சென்னை,

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளநிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

அதனை தொடர்ந்து இந்த ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த இறுதிப்போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.

இந்தியா பிளேயிங் லெவன்:-

ரோகித் சர்மா, சுப்மன் கில்(கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்

நியூசிலாந்து பிளேயிங் லெவன்:-

டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் ஹே(விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல்(கேப்டன்), ஜகரி போல்க்ஸ், கைல் ஜேமிசன், கிறிஸ்டியன் கிளார்க், ஜெய்டன் லெனாக்ஸ்

Tags:    

மேலும் செய்திகள்