மகளிர் பிரீமியர் லீக்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

பெங்களூரு அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.;

Update:2026-01-18 00:58 IST

மும்பை,

5 அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நவி மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா 62 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளாக கிரேஸ் ஹாரிஸ், ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். கிரேஸ் ஹாரிஸ் 1 ரன்னில் அவுட்டான நிலையில், ஸ்மிருதி மந்தனா, ஜார்ஜியா வோல் உடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்மிருதி 96 ரன்களில் அவுட்டானார்.

இந்த நிலையில் பெங்களூரு அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜார்ஜியா 54 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்