ஐ.பி.எல். 2026: ஏலம் நடைபெறும் இடம், தேதி அறிவிப்பு

அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக மினி ஏலம் நடைபெற உள்ளது.;

Update:2025-11-14 08:15 IST

மும்பை,

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.

இந்நிலையில் மினி ஏலம் நடைபெறும் தேதி, இடம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்