இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.;

Update:2025-11-14 02:09 IST

கொல்கத்தா,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் அல்லது அக்‌ஷர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், ரையான் ரிக்கெல்டன், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ேடானி டி ஜோர்ஜி, பவுமா (கேப்டன்), கைல் வெரைன், செனுரன் முத்துசாமி, சைமன் ஹார்மர், கேஷவ் மகராஜ், மார்கோ யான்சென், ககிசோ ரபடா.

Tags:    

மேலும் செய்திகள்