ஐ.பி.எல்: ஜடேஜா, சாம் கர்ரன் வரிசையில் மற்றொரு நட்சத்திர வீரரை விடுவிக்க சிஎஸ்கே முடிவு..?

ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை ராஜஸ்தான் அணிக்கு சிஎஸ்கே டிரேட் செய்துள்ளது.;

Update:2025-11-15 14:59 IST

image courtesy:PTI

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான தக்கவைக்கப்படும் மற்றும் கழற்றி விடப்படும் வீரர்களின் பட்டியல் இன்று மாலை அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது. அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.

அதன்படி 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது நட்சத்திர வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை கொடுத்து விட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் இடமிருந்து சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. அதுபோக சில வீரர்களை விடுவிக்கவும் சிஎஸ்கே முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவை விடுவிக்க சென்னை அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்