நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: இந்திய வீரர் விலகல்
எஞ்சிய இரு ஆட்டத்துக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது;
கவுகாத்தி,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. எஞ்சிய இரு ஆட்டங்கள் விசாகப்பட்டினம் (ஜன.28) மற்றும் திருவனந்தபுரத்தில் (ஜன.31) நடக்கிறது.
இந்த நிலையில் எஞ்சிய இரு ஆட்டத்துக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வீரர்கள் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அங்கம் வகிக்கும் பேட்ஸ்மேன் திலக் வர்மா, காயத்திலிருந்து மீண்டு வருகிறார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 ஆட்டங்களில் இருந்து ஒதுங்கினார். அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டார்.
கடைசி இரு ஆட்டங்களில் திலக் வர்மா ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் உடல்தகுதியை எட்டாததால் அணியில் சேர்க்கப்படவில்லை.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திலக் வர்மா, போட்டிக்குரிய முழு உடல்தகுதியை பெறுவதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் கடைசி இரு ஆட்டங்களிலும் விளையாடமாட்டார்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.