மகளிர் கிரிக்கெட்டில் முக்கிய மைல்கல்லை எட்டிய ஸ்மிருதி மந்தனா

80 ரன்கள் எடுத்ததால் ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்;

Update:2025-12-28 21:48 IST

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீராங்கனைளாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.ஸ்மிருதி மந்தநா 80 ரன்களும், ஷபாலி வர்மா 79 ரன்களும் எடுத்தனர்.பின்னர் ரிச்சா கோஷ் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில், இந்த போட்டியில் 80 ரன்கள் எடுத்ததால் ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா. மேலும், 10,000 ரன்களைக் கடந்த 4வது வீராங்கனை ஆனார். 

Tags:    

மேலும் செய்திகள்