4வது டி20; இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதல்

5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது;

Update:2025-12-27 21:59 IST

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. .இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது.  இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் வென்று வெற்றி பயணத்தை தொடர இந்தியா முயற்சிக்கும். அதேவேளை ஆறுதல் வெற்றி பெற இலங்கை அணி தீவிரம் காட்டும்.  

Tags:    

மேலும் செய்திகள்