வாசிம் அக்ரம் சாதனையை சமன் செய்த ஸ்டார்க்

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.;

Update:2025-12-04 13:14 IST

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) தொடங்கியது .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்சேல் ஸ்டார்க்கின் அபாரமான பந்து வீச்சால் தொடக்க வீரர் பென் டக்கெட் , ஒலி போப் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்கள். 2 விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) சாதனையை ஸ்டார்க் சமன் செய்தார்.

அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட் வீழ்த்தி 16-வது இடத்தில் உள்ளார். ஸ்டார்க் 102 டெஸ்டில் 414 விக்கெட் கைப்பற்றி அவரை சமன் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்