எஸ்.ஏ. டி20: பிரிட்டோரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ்
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.;
கேப் டவுன்,
4-வது எஸ்.ஏ. லீக் டி20 கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது.இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் டிவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். சன்ரைசர்ஸ் தரப்பில் மார்கோ யான்சன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் 19.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பிரிட்டோரியா கேப்பிடல்சை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் எஸ்.ஏ. லீக் டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.
சன்ரைசர்ஸ் தரப்பில் சிறப்பாக ஆடிய அந்த அணியின் மேதிவ் 68 ரன்களையும், ஸ்டப்ஸ் 63 ரன்களையும் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். தென்ஆப்பிரிக்கா டி20 தொடரில் (எஸ்.ஏ. லீக் ) சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் சாம்பியன் பட்டம் வெல்வது இது 3வது முறையாகும். சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.