3வது டி20: இந்தியா அபார பந்துவீச்சு...154 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து

இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட்டுகள் , ஹர்திக் பாண்டியா , ரவி பிஷ்ணோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.;

Update:2026-01-25 20:52 IST

கவுகாத்தி,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 23ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியிலும் நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட  டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். டேவான் கான்வே 1 ரன்களுக்கும் , டிம் சீபராட் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

  கிளென் பிலிப்ஸ் ,மார்க் சாப்மேன் மட்டும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர்.கிளென் பிலிப்ஸ் 48 ரன்களும் , மார்க் சாப்மேன் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து 153 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் பும்ரா 3 விக்கெட்டுகள் , ஹர்திக் பாண்டியா , ரவி பிஷ்ணோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்