பிக்பாஷ் லீக் இறுதிப்போட்டி: சிட்னி அணியை வீழ்த்தி பெர்த் சாம்பியன்
பெர்த் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது;
மெல்போர்ன்,
பிக்பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் - பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெர்த் அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சிட்னி அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் பெர்த் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிட்னி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் ஸ்மித் , ஹென்ரிக்ஸ், பிலிப்ஸ் ஆகியோர் தலா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களுக்கு சிட்னி அணி ஆட்டமிழந்தது. பெர்த் அணியில் ஜி ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 133 ரன்கள் எடுத்து சாம்பியன் ஆகும் முனைப்பில் பெர்த் அணி விளையாடியது.
தொடக்கம் பெர்த் அணி அதிரடியாக விளையாடியது. மிட்சேல் மார்ஷ் பின் ஆலன் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர்.மிட்சேல் மார்ஷ் 44 ரன்களும், பின் ஆலன் 36 ரன்களும் எடுத்தனர். பின்னர் வந்த வீரர்களும் நிலைத்து ஆடினர். பெர்த் அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெர்த் அணி சாம்பியன் பட்டம் வென்றது.