டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பது உறுதியாகியுள்ளது;

Update:2026-01-25 16:20 IST

துபாய்,

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து வங்காளதேச அணி அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி வங்காளதேசம் தொடரைப் புறக்கணித்த நிலையில், அவர்களுக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)  அறிவித்துள்ளது.

  இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ள வங்காளதேசத்துக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆதரவு கரம் நீட்டியது. உலக கோப்பையில் பங்கேற்பது குறித்து சந்தேகத்தை கிளப்பி அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. டி20 உலக கோப்பை தொடருக்கு சல்மான் அகா தலைமையில் 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்தது. பாகிஸ்தான் அணி அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் அணி:

சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசம், பஹீம் அஷ்ரப், பகர் ஜமான், கவாஜா முகமது நபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா பர்ஹான், சாஹிப்சாதா, ஷாஹிம்ஹானி ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக். 

Tags:    

மேலும் செய்திகள்