டி20 கிரிக்கெட்: இன்னும் ஒரு விக்கெட்.. முதல் வீரராக வரலாற்று சாதனை நிகழ்த்த போகும் அர்ஷ்தீப் சிங்

ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2025-08-21 20:34 IST

image courtesy:PTI

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப். 10-ந் தேதி எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து 14-ந் தேதி பரம எதிரியான பாகிஸ்தானையும், 19-ந் தேதி ஓமனையும் சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இளம் மற்றும் முன்னணி வீரர்களின் கலவையாக அமைந்துள்ள இந்திய அணியே இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்பது பலரின் கணிப்பாக உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வரலாற்று சாதனை படைக்க வாய்ப்புள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங் இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரராக முதலிடத்தில் உள்ளார்.

இந்த சூழலில் இன்னும் ஒரு விக்கெட் கைப்பற்றினால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அர்ஷ்தீப் சிங் படைப்பார். அதனை இந்த ஆசிய கோப்பையின் முதல் போட்டியிலேயே அவர் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்