தோனியின் காலை தொட்டு வணங்கிய வைபவ் சூர்யவன்ஷி

சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றிபெற்றது.;

Update:2025-05-21 09:38 IST

டெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றிபெற்றது.

ஆட்டம் நிறைவடைந்தபின் ஒவ்வொரு வீரரும் சக வீரர்களுடன் கை குலுக்கி வாழ்த்துகளை பரிமாறி சென்றனர். அந்த வகையில் மைதானத்தில் சென்னை கேப்டன் தோனியை ராஜஸ்தான் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சந்தித்து வாழ்த்து பரிமாறினார். அப்போது, வைபவ் சூர்யவன்ஷி தோனியின் காலை தொட்டு வணங்கினார். இதனால் சற்று திகைத்த தோனி , சூர்யவன்ஷிக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்