விஜய் ஹசாரே கோப்பை: விதர்பா அணி வெற்றி
41.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.;
சென்னை ,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பரோடா - விதர்பா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி சதமடித்த ஹர்திக் பாண்டியா 133 ரன்கள் எடுத்தார்.இதில் ரெக்கதே வீசிய 39வது ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் பறக்க விட்ட ஹர்திக் பாண்டியா 6வது பந்தில் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 34 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து களமிறங்கிய விதர்பா அணி வீரர்கள் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.அந்த அணியில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த அமன் மோகடே சதமடித்து, 150 ரன்கள் எடுத்தார். அதர்வா தைடே , துருவ் ஷேரே தலா 65 ரன்கள் எடுத்தனர்.இறுதியில் விதர்பா அணி 41.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.