விஜய் ஹசாரே தொடர்; சாய் சுதர்சன் விலகல் ?

எஞ்சிய போட்டிகளில் இருந்து தமிழக வீரர் சாய் சுதர்சன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2026-01-02 20:08 IST

சென்னை ,

33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில், விஜய் ஹசாரே தொடரில் எஞ்சிய போட்டிகளில் இருந்து தமிழக வீரர் சாய் சுதர்சன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேச அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் கடந்த மாதம் 26-ந் தேதி லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது சாய் சுதர்சனுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.இந்த காயம்  குணமடைய ஒரு மாத காலம் ஆகும் என கூறப்படுகிறது.இதனால் சாய் சுதர்சன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்