டி20 உலகக் கோப்பை; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.;
கேப்டவுன்,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , ரிக்கல்டன் அணியில் இடம் பெறவில்லை.
தென் ஆப்பிரிக்கா அணி:
மார்க்ராம் (கேப்டன்), போஷ், டெவால்ட் பிரீவிஸ், டி காக், டோனி டி சோர்ஜி, டனவன் பெரேரா, மார்கோ ஜான்சன், லிண்டே, மஹாராஜ், மபாகா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, ஆன்ரிச் நார்ட்ஜே, ரபாடா, ஜேசன் ஸ்மித்.