மகளிர் பிரீமியர் லீக்: 5 அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் முழு விவரம்

இந்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று நடைபெற்றது.;

Update:2025-11-28 17:38 IST

image courtesy:BCCI

சென்னை,

4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பை மற்றும் வதோதராவில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் நேற்று நடந்தது. ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர்.

பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார். போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை குறி வைத்து ஏலம் கேட்டனர்.

சமீபத்தில் நடந்த மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் தொடர்நாயகி விருது பெற்ற இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மாவை வாங்க அதிக போட்டி நிலவியது. ரூ.50 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த அவரை உ.பி.வாரியர்ஸ் ஆர்.டி.எம். கார்டு என்னும் சிறப்பு சலுகையை பயன்படுத்தி ரூ.3.20 கோடிக்கு தங்கள் வசப்படுத்தியது. மொத்தம் 67 வீராங்கனைகளை ரூ.40.80 கோடிக்கு அணிகள் வாங்கின.

இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் முழு விவரம் குறித்து இங்கு காணலாம்..!

மும்பை இந்தியன்ஸ்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், ஜி கமிலினி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக், ஹேலி மேத்யூஸ், ரஹிலா பிர்தஸ், மில்லி இல்லிங்வொர்த், அமன்ஜோத் கவுர், அமெலியா கெர், சமஸ்கிருதி குப்தா, எஸ் சஜனா, திரிவேணி வசிஸ்தா, நிக்கோலா கேரி, பூனம் கெம்னார் மற்றும் நல்லா ரெட்டி.

டெல்லி கேப்பிடல்ஸ்: ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, லிசெல்லே லீ, நந்தினி ஷர்மா, லாரா வோல்வார்ட், மரிசானே கப், தனியா பாட்டியா, தீயா யாதவ், அன்னாபெல் சதர்லேண்ட், மம்தா மடிவாலா,, நிகி பிரசாத், சினெல்லே ஹென்றி, சினே ராணா, மின்னு மணி, லூசி ஹாமில்டன் மற்றும் ஸ்ரீ சரணி.

குஜராத் ஜெயண்ட்ஸ்: டேனி வியாட்-ஹாட்ஜ், ஆஷ் கார்ட்னர், பெத் மூனி, ரேணுகா தாகூர், ராஜேஸ்வரி கயக்வாட், பார்தி புல்மாலி, சோபி டெவின், யாஸ்திகா பாட்டியா, டைட்டாஸ் சாது, ஜார்ஜியா வேர்ஹாம், ஷிவானி சிங், ஹேப்பி குமாரி, கிம் கார்த், காஷ்வீ கௌதம், தனுஜா கன்வர், கனிகா அஹுஜா, அனுஷ்கா சர்மா, ஆயுஷி சோனி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், லாரன் பெல், லின்சே ஸ்மித், ஜார்ஜியா வோல், ஸ்ரேயங்கா பாட்டீல், பிரத்யோஷா குமார், பிரேமா ராவத், கிரேஸ் கேரிஸ், நாடின் டி கிளார்க், பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, டி ஹேமலதா மற்றும் கௌதமி நாயக்

உ.பி. வாரியர்ஸ்: ஸ்வேதா செஹ்ராவத், தீப்தி ஷர்மா, ஷிப்ரா கிரி, கிராந்தி கவுட், ஆஷா சோபனா, மெக் லானிங், தியன்ட்ரா டோட்டின், தாரா நோரிஸ், சோபி எக்லெஸ்டோன், போப் லிட்ச்பீல்ட், சோலி டிரையான், கிரண் நவ்கிரே, ஷிகா பாண்டே, சிம்ரன் ஷேக், ஹர்லீன் தியோல், பிரதிகா ராவல், ஜி த்ரிஷா மற்றும் சுமன் மீனா. 

Tags:    

மேலும் செய்திகள்