தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இளையோர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி

டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 25 ரன்னில் வெற்றி பெற்றது.;

Update:2026-01-04 06:48 IST

பெனோனி,

இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இளையோர் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெனோனியில் நேற்று நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. இதனால் 50 ஓவர்களில் இந்திய அணி 301 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது . இந்திய அணியில் சிறப்பாக விளையாடி அதிகபட்சமாக ஹர்வன்ஷ் பங்காலியா 93 ரன்னும், அம்ப்ரிஷ் 65 ரன்னும் எடுத்தனர்.

தொடர்ந்து 302 ரன்கள் இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 27.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 25 ரன்னில் வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்