விஜய் ஹசாரே கோப்பை: அக்சர் படேல் அபார சதம்: குஜராத் திரில் வெற்றி
7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது.;
ஆமதாபாத்.
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் குஜராத்- ஆந்திரா அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 60 பந்தில் 70 ரன்கள் விளாசினார். அக்சர் படேல் 111 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 130 ரன்கள் குவித்தார்.
பின்னர் 319 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆந்திரா களம் இறங்கியது. தொடக்க வீரர் ஞானேஷ்வர் 125 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இருப்பினும் ஆந்திரா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் ஆந்திரா 311 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது.